"பெண்களை பராமரிப்பது ஒரு பெரும் பொறுப்பாகும். மனுசம்ஹிதை, வேத கொள்கையின்படி, பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை. அவளை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும். சிறுவயதில் தந்தை பார்த்துக்கொள்ள வேண்டும்; இளம் வயதில் ஒரு நல்ல கணவன் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவள் வயதானதும் வளர்ந்த மகன்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் பெண் சுதந்திரமாக இருப்பதற்கு எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. அதுவே வாழ்வின் வேத கொள்கையாகும். உண்மையில் பெண் பலகீனமான பாலினமாகும். அவர்களுக்கு நல்ல தந்தையிடமிருந்து, நல்ல கணவரிடமிருந்து, நல்ல மகனிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது."
|