"அத்வைத என்றால் கிருஷ்ணர் தானே விரிவாக்கம் செய்கிறார். எவ்வாறு என்றால் நான் இங்கு உட்கார்ந்து இருக்கிறேன், நீங்கள் இங்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் உறவினர்களால் விரும்பப்படுகிறீர்கள், ஆனால் யாராவது விசாரிக்கிறார் 'திரு. இத்தகையோர் வீட்டில் இருக்கிறார்களா,' எனவே இதற்கு பதில்... 'இல்லை, அவர் வீட்டில் இல்லை'. கிருஷ்ணர் அவ்வாறல்ல. கிருஷ்ணர், கோலோக ஏவ நிவஸத்ய் அகிலாத்ம-பூத꞉ (ப்ஸ் 5.37). அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். கிருஷ்ணர் குருக்ஷேத்ர போர்களத்தில் அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்ததால், அவர் கோலோக அல்லது வைகுண்டத்தில் இல்லை என்பதல்ல, கோலோக, வைகுண்டத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும். நீங்கள் பகவத் கீதையில் காண்பீர்கள் கிருஷ்ணர் இப்போது இங்கும், இருக்கிறார். ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஷே அர்ஜுன திஷ்டதி (ப.கீ. 18.61). கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். உங்கள் இதயத்தில் கிருஷ்ணர் இருக்கிறார், என் இதயத்தில் கிருஷ்ணர் இருக்கிறார், எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார்."
|