"ஏதாத்ருʼஷீ தவ க்ருʼபா பகவான் (சி.சி. அந்த்ய 20.16), சைதன்ய மஹாபிரபு கற்பிக்கிறார் அதாவது 'ஓ கிருஷ்ணா, நீங்கள் மிகவும் கருணை மிக்கவர் அதனால் நீங்கள் என்னிடம் ஒலி அதிர்வாக வந்திருக்கிறீர்கள், சொல்லாக, 'கிருஷ்ணா'. என்னால் எளிதாக உச்சாடனம் செய்ய முடியும், மேலும் நீங்கள் என்னுடனே இருங்கள். ஆனால் நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி அதனால் எனக்கு இதற்கு கூட ஈர்ப்பு இல்லை'. நீங்கள் மக்களிடம் கூறுங்கள், 'நீங்கள் கிருஷ்ணா என்று ஜெபியுங்கள்; நீங்கள் அனைத்தும் பெறுவீர்கள்'. அவர்கள் அதை நம்பமாட்டார்கள். நீங்கள் இவ்வாறு சொன்னால், 'நீங்கள் மூக்கை அழுத்துங்கள். எனக்கு ஐம்பது டாலர் கொடுங்கள். நான் உங்களுக்கு சில நல்ல மந்திரம் கொடுக்கிறேன் மேலும் இது, அது. உங்கள் தலையை இப்படி செய்யுங்கள், (சிரிப்பொலி) காலை இப்படி,' 'ஓ,' அவர் கூறுவார், 'இங்கு ஏதோ ஒன்று இருக்கிறது'. ஆக (சிரிக்கிறார்) 'மேலும் இந்த சுவாமிஜி சொல்கிறார், 'வெறுமனே கிருஷ்ணா என்று ஜெபியுங்கள்'. ஓ, என்ன இது?' ஆகையினால் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார் ஏதாத்ருʼஷீ தவ க்ருʼபா பகவான் மமாபி துர்தைவ (சி.சி. அந்த்ய 20.16): 'ஆனால் நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி அதனால் தாங்கள் இந்த யுகத்தில் மிக எளிதாக கிடைக்கிறீர்கள், ஆனால் நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி, என்னால் ஆதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை'. எனவே கிருஷ்ண உணர்வு மிகவும் எளிதாக விநியோகிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள், அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சும்மா பாருங்கள். மேலும் நீங்கள் அவர்களிடம் பொய்யாக, நீங்கள் அவர்களை ஏமாற்றினால் - அவர்கள், 'ஆம், வரவேற்பார்கள். ஆம்'."
|