"எனவே சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம் உணர்வுபூர்வமானதல்ல. மக்கள், இது உணர்வுபூர்வமான இயக்கம் என்று நினைக்கிறார்கள். இல்லை. எங்களுக்கு ஒரு நல்ல பின்னணி இருக்கிறது. ஒருவர் இந்த ஸங்கீர்தன இயக்கத்தை தத்துவத்தின் மூலம் புரிந்துக் கொண்டு மேலும் கற்றும் தர்க்கம் செய்ய விரும்பினால், ஓ, அங்கே போதுமான வாய்ப்பு உள்ளது. இது உணர்வுபூர்வமானதல்ல. இது விஞ்ஞானத்தையும் வேதத்தின் அதிகாரத்தையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் இது எளிமைப்படுத்தப்பட்டது. அதுதான் இந்த இயக்கத்தின் தனி சிறப்பு. நீங்கள் பெரிய அறிஞராக அல்லது தத்துவவாதியாக, அல்லது ஒரு குழந்தையாக இந்த குழந்தையைப் போல, எல்லோரும், எவ்விதமான கஷ்டமும் இல்லாமல் பங்கேற்க முடியும்."
|