TA/690511c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
அலேன் ஙின்ஸ்பெர்க்: LSD ஜட இணைப்பு என்றால், அது அவ்வாறு தான், நான் நினைக்கிறேன், பிறகு ஒலி, சப்தமும் ஜட இணைப்புதானே?
பிரபுபாதர்: இல்லை, சப்த ஆன்மீகமாகும். முதலில், பைபளில் இருப்பது போல் 'அங்கு படைத்தல் ஏற்படட்டும்', இந்த ஒலி, இது ஆன்மீக ஒலி. படைத்தல். படைத்தல் அங்கில்லை. ஒலி படைத்தலை உற்பத்தி செய்தது. ஆகையினால், ஒலி முதலில் ஆன்மீகமாகும், மற்றும் ஒலியின் மூலம்... ஒலி - ஒலியில் இருந்து, வானம் உற்பத்தியானது; வானத்திலிருந்து, காற்று உற்பத்தியானது; காற்றிலிருந்து, நெருப்பு உற்பத்தியானது; நெருப்பிலிருந்து, தண்ணீர் உற்பத்தியானது; நீரிலிருந்து, நிலம் உற்பத்தியானது; அலேன் ஙின்ஸ்பெர்க்: ஒலி படைத்தலின் முதல் மூலப் பொருளா? பிரபுபாதர்: ஆம், ஆம். அலேன் ஙின்ஸ்பெர்க்: பாரம்பரியமாக, முதல் ஒலி எது? பிரபுபாதர்: வேதத்தில் ஓம் என்று கூறுகிறது. ஆம். எனவே குறைந்த பட்சம் நாம் புரிந்துக் கொள்ளலாம், உங்கள் பைபளிலிருந்து, பகவான் கூறுகிறார், 'அங்கு படைத்தல் ஏற்படட்டும்'. எனவே இதுதான் ஒலி, மற்றும் அங்கு படைத்தல் இருந்தது. பகவானும் அவருடைய ஒலியும் வேறுபட்டதல்ல, நித்தியமானது. நான் சொல்கிறேன் 'திரு ஙின்ஸ்பெர்க்'," இந்த ஒலியும் நானும், சிறிது வேறுபட்டது. ஆனால் பகவான் அவருடைய சக்தியிலிருந்து வேறுபட்டவரல்ல. |
690511 - உரையாடல் with Allen Ginsberg - கொலம்பஸ் |