TA/690512 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஒவ்வொறுவரும் போக்கிரிகள், அறியாமையுடன் பிறந்திருக்கிறோம். ஆனால் பகவானின் செய்திகளை அங்கீகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து ஏற்றுக் கொள்ளும் திறன் பெற்றிருக்கிறோம். அது நம்மிடம் இருக்கிறது. எனவே பகவத் கீதை சொல்கிறது, பராபவஸ் தாவத் அபோத-ஜாத꞉ (ஸ்ரீ.பா. 5.5.5): 'அறியாமையுடன் பிறந்திருக்கும் அனைத்து ஜீவாத்மாக்களும், சமூகம், கலாச்சாரம், கல்வி, நாகரீகம் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு என்ன செய்தாலும், அத்தகைய செயல்கள், அவன் யார் என்ற விபரம் ஆராயவிட்டால் அனைத்தும் தோல்வியில் தான் முடியும்'. பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம். ஆத்ம-தத்த்வம். ' நான் யார்? பகவான் யார்? இந்த ஜட இயற்கை என்பது என்ன? இந்த செயல்பாடுகள் என்ன? நம் உறவுமுறை என்ன? என்ற விபரம் ஆராயாமல் இருந்தால், - பிறகு நம் செயல்பாடுகள் அனைத்தும் வெறுமனே தோல்வி அடையும். பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம். யாவன் ந ப்ரீதிர் மயீ வாஸுதேவே: 'ஒருவர் செயலற்ற நேசத்தை பகவானிடம் ஏற்படுத்திக் கொள்ளாதவரை', ந முச்யதே தேஹ-யோகேன தாவத் (ஸ்ரீ.பா. 5.5.6.ஸ்ப் 5.5.6), 'பிறப்பு, இறப்பு மேலும் ஆத்மா ஒர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மீண்டும், மீண்டும், மாறும் இந்த நிலையிலிருந்து அவன் விடுபடாத வரை'."
690512 - சொற்பொழிவு with Allen Ginsberg at Ohio State University - கொலம்பஸ்