"ஒன்று நீங்கள் பௌதிக சக்தி அல்லது ஆன்மீக சக்தி அல்லது நடுதர சக்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும், அனைத்தும் பகவானின் சக்தி, கிருஷ்ணருடையது - ஆனால் அவை வித்தியாசமாக செயல்படுகிறது. எனவே, நான் நடுதர சக்தியாக இருக்கும் பொழுது, நான் பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால், அது என் துரதிர்ஷ்டம். ஆனால் நான் ஆன்மீக சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டால், அது என்ன அதிர்ஷ்டம். ஆகையினால் பகவத கீதையில் அது சொல்லப்பட்டுள்ளது, மஹாத்மானஸ் து மாம்ʼ பார்த தைவீம்ʼ ப்ரக்ருʼதிம் ஆஷ்ரிதா꞉ (ப.கீ. 9.13). அவர்கள் ஆன்மீக சக்தியின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டார்கள், அவர்கள் மஹாத்மா. மேலும் அவர்களின் அறிகுறி என்ன: பஜந்த்ய் அனன்ய மனஸோ, வெறுமனே தெய்வத் தொண்டில் ஈடுபடுவது. அது, அது தான்."
|