"எங்கள் பரிந்துரை வெறுமனே, ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வது. சமஸ்கிருத வார்த்தையை பொறுத்தவரை, அது ஒரு பிரச்சனையல்ல, எல்லோரும் உச்சாடனம் செய்கிறார்கள். எனவே அதில் என்ன சிரமம்? வேறெந்த மதக் கொள்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு சுலபமாக நீங்கள் காண முடியாது. நாங்கள் சடங்குகளை பரிந்துரைக்கவில்லை. அது... அது அதிக முக்கியமான காரியமல்ல. நாங்கள் கொடுப்பது, என்னவென்றால், வெறுமனே உச்சாடனம் செய்யுங்கள். சடங்கு செயல்திறன் சிறிது உதவியாக இருக்கும். அவ்வளவுதான். அது உதவியாக இருக்கும். அது தேவையானது அல்ல. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், அதாவது அனைத்து வலிமையும் மற்றும் அனைத்து அழகும், அனைத்து ஞானமும், எல்லாமே அங்கே அந்த பெயரில் இருக்கிறது. வெறுமனே உச்சாடனம் செய்வதால் நாம் எல்லாவற்றையும் அடைகிறோம், அனைத்தையும். ஆனால் அதற்கு உதவியாக. யாரோ ஒருவருக்கு நம் சடங்குகள் வேண்டாம் என்றால், அது ஒரு முக்கியமான விஷயமல்ல. நாம் சொல்லமாட்டோம். நாம் வெறுமனே பரிந்துரைப்போம் அதாவது 'நீங்கள் தயவுசெய்து உச்சாடனம் செய்யுங்கள்'. அவ்வளவுதான்."
|