"பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது போல, ஏவம்ʼ ப்ரஸன்ன-மனஸோ (SB 1.2.20), "பூரண ஆனந்தத்துடன்," பகவத்-பக்தி-யோக, "பக்தியோகத்தின் பயிற்சியின் மூலம்." ஏவம்ʼ ப்ரஸன்ன-மனஸோ பகவத்-பக்தி-யோகத꞉, முக்த-ஸங்கஸ்ய: "மேலும் ஜட கலங்கத்திலிருந்து விடுபட்டமை." அவனால் கடவுளை புரிந்து கொள்ள முடியும். கடவுள் மிகவும் மலிவானவர், யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா? அவர்களால் புரிந்து கொள்ள முடியாதென்பதால் முட்டாள்தனமானவற்றை முன்வைக்கிறார்கள்: "கடவுள் இப்படிப்பட்டவர். கடவுள் அப்படிப்பட்டவர்." மேலும் கடவுள் தாமே வரும்போது, " இதோ நான், கிருஷ்ணர்," அவர்கள் அதனை ஏற்பதில்லை. அவர்கள் தமது சொந்த கடவுளை உருவாக்கிக் கொள்வர்."
|