"எனவே இந்த கருணையுள்ள ஆசீர்வாதம் பகவான் கிருஷ்ணர் பகவான் சைதன்ய மஹாபிரபுவால் அளிக்கப்பட்டது, அவர் கிருஷ்ணரின் அவதாரம். க்ருʼஷ்ண-வர்ணம்ʼ த்விஷாக்ருʼஷ்ணம் (ஸ்ரீ.பா. 11.5.32). அவர் கிருஷ்ணர். திட்டவட்டமாக, அவர் கிருஷ்ணர், அல்லது கிருஷ்ணா உச்சாடனம் செய்கிறார். ஆனால் நிறத்தில் அவர் அக்ருʼஷ்ண. த்விஷாக்ருʼஷ்ணம். எனவே அவர் நமக்கு இந்த மிக உயர்ந்த ஆசீர்வாதத்தைக் கொடுத்தார், அதாவது நீங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள், நீங்கள் அனைத்து அறிவையும் பெறுவீர்கள். அறிவைப் பெறுவதற்கு தடையாக இருப்பது யாதெனில் நம் இதயத்தில் அடர்த்தியாக தேங்கியிருக்கும் அழுக்காகும். மேலும் பகவான் சைதன்ய கூறுகிறார் அதாவது நீங்கள் குற்றம் இல்லாமல் அழகாக உச்சாடனம் செய்தால், பிறகு உங்கள் இதயம் அழுக்கு இல்லாமல் சுத்தப்படுத்தப்படும். சேதோ-தர்பண-மார்ஜனம்ʼ பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் (ச.ச. அந்த்ய 20.12). மேலும் பிறகு நீங்கள் முக்தியடைவீர்கள். ப்ரஹ்ம-பூத꞉ ப்ரஸன்னாத்மா ந ஷோசதி (ப.கீ. 18.54)."
|