"உண்மையில், குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் பொழுது, காற்று புகாத பையில் நிரப்பி, கருவறையில் எழு மாதத்தில், அவன் உணர்வுகள் உருவாகும் பொழுது, அவன் சங்கடமாக இருப்பதை உணர்வான், மேலும் அந்த அதிர்ஷ்டசாலி குழந்தை பகவானிடம் பிரார்த்தனை செய்யும், "தயவுசெய்து இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னை விடுவிக்கவும், மேலும் இந்த வாழ்க்கையில் நான் முழுமையாக என் பகவான் உணர்வை, அல்லது கிருஷ்ண உணர்வை வளர்ப்பதில் ஈடுபடுவேன்." ஆனால் அந்த குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்ததும், பௌதிக இயற்கையின் மூன்று குணங்களின் மந்திர சக்தியால் அவன் மறந்துவிடுகிறான், மேலும் அவன் அழுகிறான், பெற்றோர்கள் கவனித்துக் கொள்கிறார்கள், மேலும் அனைத்தும் மறந்து போய்விடுகிறது."
|