"வேத இலக்கியம் தெரிவிக்கின்றது அதாவது லப்த்வா ஸுதுர்லபம் இதம் (ஸ்ரீ.பா. 11.9.29). இதம் என்றால் 'இந்த'. 'இந்த' என்றால் இந்த உடல், இந்த வாய்ப்பு, மனித உருவம் கொண்ட வாழ்க்கை, உருவாக்கப்பட்ட உணர்வுகள், முழு வசதி. விலங்குகளுக்கு, வசதிகளில்லை. விலங்குகள் காட்டில் வாழ்கின்றன. ஆனால் நாம் இந்த காட்டை, பல வசதியான சூழ்நிலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே நமக்கு உருவாக்கப்பட்ட உணர்வுகள், புத்திசாலித்தனம் இருக்கிறது. நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே அது அர்ததம் என்று அழைக்கப்படுகிறது. அர்த. அர்தவிற்கு இரண்டு பொருள் இருக்கிறது. அர்த-ஷாஸ்த்ர. அர்த-ஷாஸ்த்ர என்றால் பொருளாதாரம், எவ்வாறு செல்வத்தை அதிகரிப்பது. அது அர்த என்று அழைக்கப்படுகிறது. எனவே அர்ததம். இந்த மனித வாழ்க்கை உங்களுக்கு அர்தவை அருளும். அர்த என்றால் கணிசமான ஒன்று."
|