TA/690522 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மத்த꞉ ஸ்ம்ருʼதிர் ஜ்ஞானம் அபோஹனம்ʼ ச (BG 15.15). ஒருவன் மறக்கின்றான் அவ்வாறே ஒருவன் நினைவிற் கொள்கின்றான். ஞாபகம் மற்றும் மறதி. எனவே ஏன் ஒருவன் கிருஷ்ண உணர்வை நினைவிற் கொள்கின்றான் மேலும் ஏன் ஒருவன் கிருஷ்ண உணர்வை மறக்கின்றான்? உண்மையில் எனது ஆதார நிலை, சைத்தன்ய மஹாபிரபு சொல்வது போல, ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருʼஷ்ண-தாஸ (CC Madhya 20.108-109). உண்மையில், உயிர்வாழிகளின் ஆதார நிலை கடவுளின் நித்திய சேவகன் என்பதாகும். அவன் அந்த நோக்கத்திற்காகவே உள்ளான், ஆனால் அவன் மறக்கின்றான். எனவே அந்த மறதிகூட ஜன்மாத்ய் அஸ்ய யத꞉ (SB 1.1.1), பரமனே. ஏன்? ஏனென்றால் அவன் மறக்க விரும்பினான்."
690522 - சொற்பொழிவு SB 01.05.01-4 - New Vrindaban, USA