TA/690523 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் நியூயார்க்கில் இருக்கும்போது, வயதான பெண்மணியொருவர் எனது உபன்யாசத்திற்கு வருவார். இரண்டாவது அவென்யூவில் இல்லை; 72வது தெருவில் நான் முதன்முதலில் தொடங்கியபோது. அவருக்கு மகனோருவன் இருந்தான். நான் கேட்டேன், ‌"உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவில்லையா?" "சரி, அவனால் மனைவியொருத்தியை பராமரிக்க முடிந்தால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை." மனைவியை பராமரிப்பது இந்த யுகத்தில் பெரும் வேலையாக இருக்கிறது. தாக்ஷ்யம்ʼ குடும்ப-பரணம் (SB 12.2.6). இருந்தாலும் நாம் முன்னேறுவதாக பெருமைப்பட்டுக் கொண்டுள்ளோம். ஒரு பறவைகூட மனைவியை பராமரிக்கிறது, ஒரு விலங்குகூட மனைவியை பராமரிக்கிறது. ஒரு மனிதன் மனைவியை பராமரிக்கத் தயங்குகின்றான்? பார்த்தீர்களா? அவர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள்? ஹ்ம்? இது மிகவும் கொடூரமான யுகம். அதனால்தான், எவ்வழியிலும் உங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார். வெறுமனே ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யுங்கள். ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ... (CC Adi 17.21). மக்கள் ஆன்மீக வாழ்வில் சுத்தமாகவே ஆர்வமில்லாதிருக்கிறார்கள். விசாரணையே இல்லை."
690523 - சொற்பொழிவு SB 01.05.01-8 - New Vrindaban, USA