"எனவே ஒரு பக்தர், புலன்களை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. அது தானாக கட்டுப்படுத்தப்படுகிறது. எவ்வாறு என்றால் நாம் கிருஷ்ண-பிரசாதத்தை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ளப் போவதில்லை என்று சபதம் எடுத்திருப்பதைப் போல். ஓ, புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. 'நீங்கள் குடிக்காதீர்கள், இது கூடாது, இது கூடாது, இது கூடாது' என்ற கேள்விக்கு இடமே இல்லை. பல கூடாது. வெறுமனே கிருஷ்ண-பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதால், அனைத்து கூடாதும், ஏற்கனவே அங்கிருக்கிறது. மேலும் அது மிகவும் சுலபமாகிறது. மற்றவர்கள், ஒருவரை 'நீங்கள் புகைபிடிக்காதீர்கள்' என்று கோரிக்கையிட்டால், அது அவருக்கு மிகவும் கடினமான வேலையாக இருக்கும். ஒரு பக்தரால், எந்த நேரத்திலும் விட்டுவிடமுடியும். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆகையினால் அதே உதாரணம், அதாவது சந்தேகமில்லாமல் இந்த புலன்கள் மிகவும் வலிமை வாய்ந்தது, ஒரு பாம்பை போல் வலிமையானது. ஆனால் அந்த விஷப் பற்கலை உடைத்தால், விஷப் பற்கலை, பிறகு அது கடுமையானதாக இருக்காது. அதேபோல், உங்கள் புலன்களை கிருஷ்ணர் மீது ஈடுபடவிட்டால், இனி கட்டுப்படுத்த வேண்டாம். அது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது."
|