"இந்த உடல் எனக்கு சொந்தமானதா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது, ஏனென்றால் நான் இந்த உடலை எனது தாய் தந்தையரிடமிருந்து பெற்றுள்ளேன். எனவே அது எனது தந்தைக்கும் தாய்க்கும் சொந்தமாக இருக்கலாம். அல்லது நான் ஒரு அடிமை என்றால், அது எனது எஜமானருக்கு சொந்தமாக இருக்கலாம். அல்லது நான் ஒரு அடிமையாக இல்லாவிட்டாலும், நான் ஒரு அரசுக்கு சொந்தமாக இருப்பதால், இந்த உடல் அரசுக்கு சொந்தமாக இருப்பதால். உடனடியாக அரசு அழைப்புவிடுத்தால், "வா, உனது உடலை வியட்நாமில் தியாகம்செய்," ஓ, நீங்கள் அதை செய்தேயாக வேண்டும். எனவே, இவ்வாறாக, பகுப்பாய்வு செய்தால், உடல் உங்களுக்கு சொந்தமில்லை என்பதை காண்பீர்கள். பிறகு ஏன் திருப்திப்படுத்துவதில் இவ்வளவு சாமர்த்தியமாக இருக்க வேண்டும்? புரிந்து கொள்ள முயலுங்கள்? உங்கள் உடலின் புலன்களை திருப்திப்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை; எனது உடலின் புலன்களை திருப்திப்படுத்துவதில்தான் எனக்கு ஆர்வமுண்டு. ஆனால் இந்த உடல் எனக்கு சொந்தமில்லையென்றால், பிறகு புலன்களைத் திருப்திப்படுத்துவதில் நாம் ஏன் வல்லவராக இருக்க வேண்டும்?"
|