"முழு திட்டமும் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் மக்கள் முதலில் தான் விலங்கு அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இது தான் கல்வி. விலங்குகளின் சமூகத்தில் மதம் இல்லை, நீங்கள் மனித சமூதாயம் அல்லது நாகரீகமான சமூதாயம் என்று உரிமை கோரினால் பிறகு அங்கே மதம் இருக்க வேண்டும். பிறகு பொருளாதார வளர்ச்சி. நிச்சயமாக, மருத்துவ உணர்வுகள்படி அவர்கள் கூறுவது, ஆத்மானம், ஆத்மானம் என்றால் அவர்கள் சொல்வது 'உடல்'. ஆனால் ஆத்மா என்றால் இந்த உடல், இந்த மனம், மேலும் இந்த ஆன்மாவாகும். ஆத்மாவின் உண்மையான பொருள் ஆன்மாவாகும். எனவே ஒரு பதம் இருக்கிறது, ஆத்மானம்ʼ ஸர்வதோ ரக்ஷேத்: 'முதலில் உங்கள் ஆன்மாவை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்'. நான் நினைக்கிறேன் ஏசுகிறிஸ்துநாதரும் அதைப் போல் ஏதோ பேசியிருக்கிறார் என்று. 'அனைத்தையும் பெற்ற பிறகு, ஒருவர் தன் ஆன்மீக ஆன்மாவை இழந்தால், பிறகு அவன் அடைவது என்ன? சரிதானே?"
|