TA/690606b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெறுமனே கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதால், ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ யோ ஜானாதி தத்த்வத꞉ த்யக்த்வா தேஹம் (ப.கீ. 4.9), அந்த மனிதர், இந்த உடலை விட்டு போன பிறகு, மாம் ஏதி, அவர் கிருஷ்ணரிடம் செல்கிறார். மேலும் ஆன்மீக உடல் இல்லாமல் யார் கிருஷ்ணரிடம் செல்ல முடியும், அதே ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (பி.ஸ். 5.1)? ஒருவருக்கு அதே விக்ரஹ꞉ இருந்தாலே தவிர... எவ்வாறு என்றால் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும் நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறக்கும் போது, கிரீன்லாந்து என்று வைத்துக் கொள்வோம், எப்பொழுதும் பனிக்கட்டி நிறைந்த இடம், அல்லது வேறு இடமாக இருக்கலாம், எனவே உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான உடல் கிடைக்கிறது. அங்கு விலங்குகள், மனிதன், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான உடல் கிடைக்கிறது. கடும் குளிரை அவர்களால் சகித்துக் கொள்ள முடியும். நம்மால் முடியாது. அதேபோல், நீங்கள் கிருஷ்ணலோகத்திற்கு செல்லும் பொழுது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான உடல் கிடைக்கும். அந்த குறிப்பிட்ட வகையான உடல் என்ன? ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (பி.ஸ். 5.1). நீங்கள் எந்த கிரகத்திற்கு சென்றாலும், உங்களுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட வகையான உடல் தேவை. எனவே த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (ப.கீ. 4.9). மற்றும் உங்களுக்கு நித்தியமான உடல் கிடைத்தவுடன், பிறகு நீங்கள் மீண்டும் இந்த பௌதிக உலகத்திற்கு வரவேண்டியதில்லை."
690606 - சொற்பொழிவு SB 01.05.09-11 - New Vrindaban, USA