"நீங்கள் இங்கு வந்தால், நீங்கள் செவியால் கேட்டு மேலும் உச்சாடனம் செய்தால், பிறகு படிப்படியாக... கிருஷ்ணர் உங்களுக்குள் இருப்பார். அவர் உங்கள் இதயத்தின்னுள்ளே ஒரு நண்பனாக உட்கார்ந்திருக்கிறார், ஒரு எதிரியாக அல்ல. கிருஷ்ணர் எப்பொழுதும் உங்கள் நண்பர் தான். ஸுஹ்ருʼதம்ʼ ஸர்வ-பூதானாம் (ப.கீ. 5.29). நீங்கள் உங்களுடன் பேசுவதற்கு, நகைச்சுவையாக பேச, நேசம் கொள்ள நண்பரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணர் அதற்காகத்தான் அங்கு உட்கார்ந்திருக்கிறார். நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், நீங்கள் கிருஷ்ணருடன் நட்புக் கொண்டால், நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் வேறு எந்த நண்பனையும் தேடத் தேவையில்லை. நண்பன் ஏற்கனவே அங்கிருக்கிறார். நீங்கள் ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும், உங்களுக்குளே ஒரு நல்ல நண்பனை காண்பீர்கள். இந்த நண்பனை நீங்கள் உணரும் போது, அதுதான் யோகா செயல்முறை. எனவே இந்த நண்பர் மிகவும் நல்லவர், நீங்கள் அவரைப் பற்றி கேட்பதற்கு சிறிது விருப்பம் காட்டியவுடனே, ஷ்ருʼண்வதாம்ʼ ஸ்வ-கதா꞉— கிருஷ்ணரைப் பற்றி, மற்ற வீண் பேச்சல்ல, வெறுமனே கிருஷ்ணரைப் பற்றி— பிறகு கிருஷ்ணர் மகிழ்ந்திருப்பார். அவர் உங்களுக்குளே இருக்கிறார். ஷ்ருʼண்வதாம்ʼ ஸ்வ-கதா꞉ க்ருʼஷ்ண꞉ புண்ய-ஷ்ரவண-கீர்தன꞉, ஹ்ருʼத்ய் அந்த꞉ ஸ்த꞉ (ஸ்ரீ.பா. 1.2.17). ஹ்ருʼத் என்றால் இதயம். அந்த꞉ ஸ்தோ. அந்த꞉ ஸ்தோ என்றால் 'உங்கள் இதயத்தினுள் யார் உட்கார்ந்திருக்கிறார்'."
|