TA/690610 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆரம்பத்தில் நாம் குற்றம் நிறைந்த நிலையில் உச்சாடனம் செய்வோம் - பத்து வகையான குற்றங்கள். ஆனால் அதற்காக நாம் உச்சாடனம் செய்யக் கூடாது என்று அர்த்தம் அல்ல. குற்றங்கள் இருப்பினும், நாம் தொடர்ந்து உச்சாடனம் செய்ய வேண்டும். அந்த உச்சாடனம் அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுதலை பெற உதவி செய்யும். நிச்சயமாக, நாம் கவனமாக குற்றம் செய்யாமல் உச்சாடனம் செய்ய வேண்டும். ஆகையினால், பத்து வகையான குற்றங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குற்றமற்ற உச்சாடனம் செய்தவுடனே, பிறகு அதுதான் முக்தி நிலை. மேலும் முக்தி நிலைக்கு பிறகு, உச்சாடனம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் அது திவ்வியமான தளத்தில் இருக்கிறது அதாவது கிருஷ்ணரின் உண்மையான நேசமும் மற்றும் பகவானும் விரும்பப்படுவார்."
690610 - சொற்பொழிவு SB 01.05.11-12 - New Vrindaban, USA