TA/690611 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிணம் அலங்கரிக்கப்பட்டது போல, அந்த சவத்தின் மகன்கள் 'ஓ, எனது தந்தை புன்னகைக்கின்றார்' என்று பார்க்கலாம். (சிரிப்பு) ஆனால், அவன் தந்தை ஏற்கனவே எங்கே போய்விட்டார் என்று அவனுக்குத் தெரியாது. பார்த்தீர்களா? இந்த பௌதிக நாகரிகம் பிணத்தை அலங்கரிப்பது போன்றதாகும். இந்த உடல் உயிரற்றது. அது உண்மை. ஆத்மா அங்கிருக்கும்வரை அது இயங்கிக் கொண்டிருக்கும், அசைந்து கொண்டிருக்கும். உங்களது கோட் போன்று. அது உயிரற்றது. ஆனால் அது உங்கள் உடலிலிருக்கும் வரை, கோட் அசைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். கோட் அசைகிறது. ஆனால் யாராவது 'ஓ, கோட் எவ்வளவு நன்றாக அசைகிறது!' என்று மிகவும் ஆச்சரியப்பட்டால் (சிரிப்பு) கோட்'டினால் அசைய முடியாதென்று அவனுக்குத் தெரிவதில்லை. கோட் உயிரற்றது. ஆனால் கோட்டை அணியும் மனிதன் இருக்கிறான், அதனால்தான் கோட் அசைகிறது, காற்சட்டை அசைகிறது, சப்பாத்து அசைகிறது, தொப்பி அசைகிறது. அதேபோல, இந்த உடல் உயிரற்றது. அது எண்ணப்படுகிறது: இந்த உயிரற்ற உடல் இவ்வளவு காலம் இருக்கும். அதுவே ஆயுட்காலம் எனப்படுகிறது. ஆனால், மக்கள் இந்த உயிரற்ற உடலில்தான் ஆர்வமாக உள்ளனர்."
690611 - சொற்பொழிவு SB 01.05.12-13 - New Vrindaban, USA