"இந்த அச்சகம் என் குரு மஹாராஜ் அவர்களால் ப்ருʼஹத்-ம்ருதங்க என்று கருதப்பட்டது. அவர் கூறினார். நீங்கள் படத்தில் காணலாம்: அதில் இந்த மிருதங்கமும் மேலும் அச்சகமும் உள்ளது. அவர் அச்சகத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், அவர் ஒரு அச்சகத்தை நிறுவினார். அவருடைய வாழ்க்கையில் ஒரு சிறிய அச்சகத்தை நீங்கள் காண்பீர்கள். எனவே இந்த அச்சக பிரச்சாரம், இந்த இலக்கியவாதி பிரச்சாரம், தேவைப்படுகிறது, ஏனென்றால் அது உணர்ச்சி வசப்பட்ட கருத்தல்ல. கிருஷ்ண உணர்வு உணர்ச்சி வசப்பட்ட கருத்தல்ல. சில உணர்ச்சி வசப்பட்ட மக்கள் இங்கு கூடி மேலும் நடனம் ஆடிக் கொண்டு மற்றும் ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் என்பதல்ல. இல்லை. அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. அங்கே தத்துவப் பின்னணி இருக்கிறது. அங்கே இறையியல் புரிந்துணர்வு உள்ளது. அது கண்மூடித்தனமானது அல்லது உணர்வுபூர்வமானதல்ல."
|