TA/690616 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஆன்மீக ஆன்மா. நாம் எவ்விதமான பௌதிக நிலையின் கீழும் இருக்க முடியாது. எவ்வாறு என்றால், நம் சாதாரண நிலை ஆரோக்கியமான வாழ்க்கையாகும், காய்ச்சல் நிலை அல்ல. அது அசாதாரணமான வாழ்க்கை. ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அது அவருடைய சாதாரண நிலை அல்ல. அது தற்காலிகமானது, அசாதாரணமான வாழ்க்கை. உண்மையில் வாழ்க்கை என்பது சுகாதாரமான வாழ்க்கை. நாம் நன்றாக சாப்பிட வேண்டும். நாம் நன்றாக தூங்க வேண்டும். நாம் நன்றாக வேலை செய்ய வேண்டும். நாம்... நம் மூளை நன்றாக வேலை செய்ய வேண்டும். இவைதான் ஆரோக்கியத்திற்கு அடையாளம். ஆனால் என்னால் நன்றாக வேலை செய்ய முடியாவிட்டால், என்னால் நன்றாக தூங்க முடியாவிட்டால், என்னால் நன்றாக வேலை செய்ய முடியாவிட்டால், என்னால் என் மூளையை நன்றாக இயக்க முடியாவிட்டால், அப்படியென்றால் அசாதாரணமான நிலை. எனவே அந்த நேரத்தில், அவன் ஒரு நிபுணர் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆக நிபுணர் மருத்துவர் இதோ இருக்கிறார், நாரதர் முனிவர். மேலும் அவர் தன் சீடர்களிடம் தன்னை நிபுணராக்கும்படி ஆலோசனை கூறுகிறார். இதை தான் பரம்பராமுறை என்று அழைக்கின்றோம்."
690616 - சொற்பொழிவு SB 01.05.13 - New Vrindaban, USA