"ஷுகதேவ கோஸ்வாமீ வீடுபேறு பெற்றார் மேலும் வெறுமனே உச்சாடனம் செய்வதன் மூலம் முற்றுபெற்ற நிலையடைந்தார். இந்த உச்சாடனம் என்றால் பகவனின் புகழை ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து விவரிப்பது. எனவே அவர் கூறுகிறார் ப்ரவர்தமானஸ்ய குணைர் அனாத்மனஸ் ததோ பவான் தர்ஷய சேஷ்டிதம்: 'மக்கள் பௌதிக இயற்கையின் குணத்தில் அதிகமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சிக்கலில் இருந்து அவர்களை விடுவிக்க, நீங்கள் வழி காட்டுங்கள். அவர்களை வெறுமனே செவியால் கேட்கவிடுங்கள். பகவானின் அற்புதமான செயல்களுக்கு செவிவழி வரவேற்பு அளிக்கட்டும்.' அந்த செயல்கள்... ஏனென்றால் பூரணமான... கிருஷ்ணர் பூரண உண்மையாவார். எனவே கிருஷ்ணரும் அவருடைய செயல்களும் ஒன்றே ஏனென்றால் அவை பூரணமானவை. அது இருமையல்ல. பௌதிக உலகில், நானும் என் செயல்களும் வெவ்வேறு. ஆனால் அது தான்... இந்த உலகம் இருமை உலகம். ஆனால் பூரணமான உலகில், கிருஷ்ணரும் அவருடைய பொழுது போக்கும், கிருஷ்ணரும் அவருடைய பெயரும், கிருஷ்ணரும் அவருடைய தகுதிகளும், கிருஷ்ணரும் அவருடைய புகழும், அவை அனைத்தும் கிருஷ்ணரே. கிருஷ்ணரும் அவருடன் இணைந்தவர்களும், அவர்கள் அனைவரும் கிருஷ்ணரே. கிருஷ்ணர் மாட்டிடையர். எனவே கிருஷ்ணரும் அவருடைய மாடுகளும், அனைத்தும் கிருஷ்ணரே. அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. கிருஷ்ணரும் கோபியர்களும், அவர்கள் எல்லோரும் கிருஷ்ணரே. ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபி꞉ (பி.ஸ. 5.37). எனவே நாம் அதை புரிந்துக் கொள்ள வேணடும்."
|