TA/690621b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒருவேளை நாம் இந்த கிருஷ்ண உணர்வை தொடர்ந்து நடத்திக் கொண்டுடிருந்தால். இப்போழுது இறப்பு உடனடியாக ஏற்படலாம். நாம் அனைவரும் மடிந்துவிடுவோம். எனவே நாரதர் நம்மை ஊக்குவிக்கிறார், அதாவது புனர் ஏவ ததோ ஸ்வேத்வ(?): " நாம் இறக்கலாம் அல்லது இழிந்து வீழ்ந்துவிடலாம்..." ஏனென்றால் மாயா மேலும் கிருஷ்ணர், அருகருகே இருக்கிறார்கள். "எனவே அதனால் பாதகமில்லை. நாம் கிருஷ்ண உணர்வில் இருக்கின்றோம். ஆனால் நாம் இழிந்து வீழ்ந்துவிட்டால்...," வ்ரஸே வ்ā தத்ā ஸ்வ-தர்ம த்ய்āக நிமித்த நர்த்āśரய(?), "பிறகு நீங்கள் உங்களுடைய மற்ற கடமைகளை கைவிட்டுவிடுவீர்கள். எனவே உங்கள் கடமைகளை கைவிட்டதிற்கு, சில தண்டனைகள் நிச்சயமாக இருக்கும்." நான் சொல்வதாவுது இந்த உலக தண்டனையல்ல. எவ்வாறு என்றால், வேத முறைப்படி, ப்ராஹ்மணஸ், க்ஷத்ரியஸ்; என்று இருக்கிறார்கள், உதாரணத்திற்கு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆலோசனை கூறினார் அதாவது "நீ க்ஷத்ரியன். எனவே நீ இந்த போரில் இறந்தால், பிறகு சொர்கவாசல் உனக்காக திறந்திருக்கும்." ஏனென்றால் சாஸ்திரத்தை பொறுத்தவரை, ஒரு க்ஷத்ரியன் போரிடும் போது இறந்தால், தானாக அவனுக்கு சொர்கலோக கிரகத்திற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. மேலும் அவன் சண்டை போடுவதை தவிர்த்து, ஓடிவிட்டால், அவன் நரகத்திற்கு போவான். எனவே அதேபோல், ஒருவர் தன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், அளிக்கப்பட்ட கடமைகளை, பிறகு அவன் இழிந்து வீழ்ந்துவிடுவான்."
690621 - சொற்பொழிவு SB 01.05.17-18 - New Vrindaban, USA