"எனவே ஸ்ரீமத் பாகவதத்தின் அறிக்கை அதாவது தல் லப்யதே து꞉கவத் அன்யத꞉ ஸுகம் (ஸ்ரீ.பா. 1.5.18). நீங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி செய்யாதீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்டதுக்கு மேல் நீங்கள் எதிர்ப்பார்க கூடாது. அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த ஜீவாத்மாக்கள் அவர்களுடைய வாழ்க்கை நிலைக்கு ஏறப்ப வெவ்வேறு தரங்களில் பெறுகிறார்கள், எனவே அவை அவர்களுடைய கடந்தகால கர்மாவை பொறுத்தது, தைவேன, தைவ-நேத்ரேண (ஸ்ரீ.பா. 3.31.1), கர்மணா. ஆக நீங்கள் அதை மாற்ற முடியாது. அது இயற்கையின் நீதி, நீங்கள் அதை மாற்ற முடியாது. உங்களுக்கு ஏன் பலவகையான வாழ்க்கை, பலவகையான நிலை, பலவகையான தொழில் கிடைக்கிறது. அது விதிக்கப்பட்டது. விஷய꞉ கலு ஸர்வத꞉ ஸ்யாத் (ஸ்ரீ.பா. 11.9.29). விஷய, இந்த பௌதிக இன்பம் — என்றால், உண்பது, தூங்குவது, இனச்சேர்க்கை, மேலும் தற்காத்துக் கொள்வது — இவைகள்... தரநிலை மட்டுமே வேறுபட்டது. நான் ஏதோ உட்கொள்கிறேன், நீங்கள் வேறு ஏதோ உட்கொள்கிறீர்கள். ஒருவேளை, என்னுடைய கணிப்பில், நீங்கள் சரியாக உண்பதில்லை. உங்களுடைய கணிப்பில் நான் சரியாக உண்பதில்லை. ஆனால் உண்பது அதே மாதிரி தான். நீங்கள் உட்கொள்கிறீர்கள். நான் உட்கொள்கிறேன். எனவே பௌதிக உலகில் இன்பத்தின் தரம், அடிப்படை கொள்கையை எடுத்துக் கொண்டால், அனைத்தும் ஒன்றே. ஆனால் நாம் உருவாக்கினோம், 'இது சிறந்த தரம். அது மோசமான தரம். இது மிகவும் அருமை. அது மிகவும் மோசமானது'."
|