"கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயலுங்கள், அவர் எப்படி தோன்றுகிறார், அவர் எப்படி மறைகிறார், அவரது ஆதார நிலை என்ன, எனது ஆதார நிலை என்ன, கிருஷ்ணருடனான உறவு என்ன, எப்படி வாழ்வது. எல்லாவற்றையும். இந்த விஷயங்களை தெரிந்து கொண்டாலே, கிருஷ்ணர் கூறுகிறார், ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ யோ ஜானாதி தத்த்வத꞉... தத்த்வத꞉ என்றால் உண்மையாக, விஞ்ஞானபூர்வமாக; விருப்பத்தின் பேரிலோ அல்லது உணர்ச்சிவசத்தாலோ அல்லது மதவெறியாலோ அல்ல. இல்லை. கிருஷ்ண உணர்வு முழுமையாக விஞ்ஞானபூர்வமானது, திடமான அறிவியல். அது போலியானது அன்று. அது கற்பனையும் அன்று."
|