"ஸனாதன கோஸ்வாமீ அவர்களுக்கு அந்த நேரத்தில் கோவில் இல்லை; அவருடைய ஸ்ரீ மூர்த்தியை மரத்தில் தொங்கவிட்டார். எனவே மதன்மோகன் அவருடன் பேசிக் கொண்டிருந்தார், 'ஸனாதன, நீ அனைத்து காய்ந்து போன சப்பாதியை கொண்டு வருகிறாய், மேலும் அது ஊசிப் போய்விட்டது, மற்றும் எனக்கு சிறிது உப்பு கூட நீ கொடுப்பதில்லை. நான் எவ்வாறு உட்கொள்வது?' ஸனாதன கோஸ்வாமீ கூறினார், 'ஐயா, நான் எங்கு செல்வது? எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் கனிவாக அதை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னால் அசைய முடியவில்லை; முதியவன்.' நீங்கள் பாருங்கள். ஆகையால் கிருஷ்ணர் அதை உட்கொள்ளும்படி ஆகிவிட்டது. (சிரிக்கிறார்) ஏனென்றால் பக்தன் அளிக்கின்றான், அவரால் மறுக்க முடியவில்லை. யே மாம்ʼ பக்த்யா ப்ரயச்சதி. உண்மையான விஷயம் பக்தி. உங்களால் கிருஷ்ணருக்கு எதைக் கொடுக்க முடியும்? அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானது. உன்னிடம் என்ன இருக்கிறது? உன்னுடைய மதிப்பு என்ன? மேலும் உன் பொருள்களின் மதிப்பு என்ன? அது ஒன்றுமேயில்லை. ஆகையினால், உண்மையான விஷயம் பக்த்யா; உண்மையான விஷயம் உங்களுடைய உணர்வு. 'கிருஷ்ணா, கனிவொடு அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தகுதி இல்லை. நான் மிகவும் வீனான, வீழ்ந்த, ஆனால் (அழுகிறார்) நான் இந்த பொருள்களை உங்களுக்காக கொண்டு வந்தேன். தயவுசெய்து எடுத்துக் கொள்ளுங்கள்'. இது ஏற்றுக் கொள்ளப்படும். தற்பெருமை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் கவனமாக இருங்கள். நீங்கள் தொடர்பு கொள்வது கிருஷ்ணருடன். அதுதான் என் வேண்டுகொள். மிக்க நன்றி (அழுகிறார்)"
|