"எனவே இந்த பௌதிக மாசுபடுதலால் ஏற்படும் துன்பத்தை ஒருவரால் புரிந்துக் கொள்ள முடியாவிட்டால், அவனுடைய வாழ்க்கை ஒரு விலங்கின் வாழ்க்கையாகும். தான் கஷ்டப்படுவது அவனுக்கு தெரிகிறது, ஆனால் அவன் துன்பத்தை சில முட்டாள்தனமான காரியங்களால் மறைக்க முயற்சி செய்கிறான்: மறதியால், குடிப்பதால், போதைப் பொருளால், இதனால், அதனால். அவன் துன்பத்தைப் பற்றி அவனுக்கு தெரியும், ஆனால் அதை சில முட்டாள்தனமான காரியங்களால் மறைக்க விரும்புகிறான். ஒரு முயலைப் போல். ஒரு முயல், சில மூர்க்கமான விலங்குகளுடன் நேருக்கு நேர் வரும்போது, முயல் கண்களை மூடிக் கொள்ளும்; தான் பாதுகாப்பாக இருப்பதாக அது நினைத்துக் கொள்கிறது. அதேபோல், செயற்கை முறைகளால், வெறுமனே நம் துன்பங்களை மறைக்க முயற்சி செய்வது, அது தீர்வு ஆகாது. அது அறியாமையாகும். துன்பங்கள் ஆன்மீக வாழ்க்கையின் அறிவொளியால் தீர்க்கப்படலாம், ஆன்மிக பேரின்பம்."
|