"பகவத் கீதை இறுதியான முடிவில் கூறுகிறது, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (ப.கீ. 18.66) 'என் அன்பு அர்ஜுன...' அவர் அர்ஜுனருக்கு கற்பிக்கிறார்—அர்ஜுனருக்கு மட்டுமல்ல, ஆனால் அனைத்து மனித சமூகத்திற்கும்—அதாவது 'உற்பத்தி செய்யப்பட்ட உன்னுடைய அனைத்து தொழில் கடமைகளையும் விட்டுவிடு. நீ வெறுமனே என்னுடைய முன்மொழிவுக்கு சம்மதம் கொடு, மேலும் நான் உனக்கு சகல பாதுகாப்பும் அளிப்பேன்'. நாம் நம் தனித்துவத்தை இழந்துவிடுவோம் என்று பொருள்படாது. எவ்வாறு என்றால் கிருஷ்ணர் அர்ஜுனரிடம் கூறுகிறார், 'நீ இதைச் செய்யவும்', ஆனால் அவர் அவரை வற்புறுத்தவில்லை, 'நீ இதைச் செய்யவும்'. 'நீ விரும்பினால், அதை செய்யவும்'. உங்கள் சுதந்திரத்தை கிருஷ்ணர் தொடவில்லை. அவர் வெறுமனே உங்களிடம் கேட்டுக் கொள்கிறார், 'நீ இதைச் செய்யவும்'. எனவே நம் உணர்வை பரமபுருஷரின் உணர்வோடு இணைத்தால் நம் தனித்துவத்தை வைத்துக் கொள்வதன் மூலம் நாம் சந்தோஷமாகவும் மேலும் அமைதியாகவும் இருக்கலாம்."
|