"முயல்கள், அவை ஒரு வேடனை நேருக்கு நேர் பார்த்ததும் அது புரிந்துக் கொள்ளும் அதாவது 'இப்போது என் உயிருக்கு ஆபத்து', அது தன் கண்களை மூடிக்கொள்ளும். அது நினைக்கிறது அதாவது 'பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது'. (சிரிப்பு) மேலும் அது அமைதியாக கொல்லப்படுகிறது. (சிரிப்பு) நீங்கள் பார்த்தீர்களா? அதேபோல், அவர்களுடைய பிரச்சனை அங்கிருக்கிறது, ஆனால் நாம் கண்களை மூடிக்கொள்கிறோம்: 'ஓ, பிரச்சனை ஒன்றும் இல்லை, நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்'. அது அவ்வளவுதான். (சிரிப்பொலி) எனவே இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது. பிரச்சனை தீர்க்கப்படவில்லை, ஆனால் அவர்கள் நினைக்கிறார்கள் அதாவது கண்களை மூடிக்கொள்வதால் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று. அவ்வளவுதான். இப்பொழுது, பிரச்சனைக்கான தீர்வு இதோ, கிருஷ்ணர் கூறுகிறார், பகவத் கீதையில், ஏழாம் அத்தியாயத்தில் பதினான்காவது பதத்தில்: "பௌதிக இயற்கையின் சட்டங்களின்படி அளிக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கடினம், ஆனால் என்னிடம் சரணடைந்த ஒருவர், அவர் ஜெயித்துவிடுவார்." ஆகையினால் நாங்கள் இந்த கிருஷ்ண உணர்வை, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கற்பிக்கிறோம்."
|