"மாயா அங்கிருக்கிறது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், 'மாயா மிகவும் வலுவானது'. ஆனால் நீங்கள் கிருஷ்ணரை பிடித்துக் கொண்டால் மிகவும்..., மேலும் வலுவாக, பிறகு மாயாவால் ஒன்றும் செய்ய முடியாது. உன்னுடைய ஜெபித்தலை ஏதோ ஒன்று எதிர்த்தால், பிறகு நீ மேலும் சத்தமாக உச்சாடனம் செய்ய வேண்டும்: ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே. ஆக நீங்கள் மாயாவை தோற்கடித்துவிடுவீர்கள். அதே மருந்து தான். குறைந்தபட்சம், நான் அவ்வாறு செய்கிறேன். நான் சில ஆபத்தான நிலையில் இருக்கும் போது, நான் ஹரே கிருஷ்ணா சத்தமாக உச்சாடனம் செய்வேன்: ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ (சிரிப்பொலி) ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. அவ்வளவுதான். பக்திவினோத டாகுர... அங்கு ஒரு பாடல் இருக்கிறது: ஜாய் ஸகல் பிபோத் கய பக்திவினோத் போலே ஜகோன் ஓ-நாம் காஇ (கீதாவலீயில் இருந்து எடுக்கப்பட்டது). அவர் கூறுகிறார், "நான் இந்த ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தவுடனே, நான் உடனடியாக அனைத்து ஆபத்திலிருந்தும் விடுபடுகிறேன்."
|