TA/690908c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹம்பர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த உடல் மாறிக் கொண்டிருக்கிறது. சும்மா உங்கள் குழந்தைப் பருவத்தை நினைவில் கொள்ளுங்கள்: ஓ, நாம் எத்தகைய தொந்தரவான வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறோம் நம்முடைய... குறைந்தபட்சம் எனக்கு நினைவில் இருக்கிறது. எல்லோருக்கும் நினைவில் இருக்கும். எனவே இந்த பிரச்சனையை நிறுத்துங்கள். யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம்ʼ மம (ப.கீ. 15.6). மேலும் அதில் என்ன சிரமம்? நீங்கள் உங்கள் சொந்த வேலையை செய்து மேலும் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். உங்கள் வணிகத்தை, தொழிலை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படியே இருங்கள். எவ்வாறு என்றால் அவன் ஒரு ஆசிரியர். சரி, அவன் ஒரு ஆசிரியர். அவன் ஒரு நகைக்கடைக்காரன். அப்படியே நகைக்கடைக்காரனாகவே இருங்கள். அவன் ஏதோ ஒன்று, இவன் ஏதோ ஒன்று. அது முக்கியமில்லை. ஆனால் கிருஷ்ண பக்தனாக இருங்கள். ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். கிருஷ்ணரை நினைவில் நிறுத்துங்கள். கிருஷ்ண பிரசாதம் உட்கொள்ளுங்கள். அனைத்தும் அங்கிருக்கிறது. மேலும் சந்தோஷ்மாக இருங்கள். அது தான் எங்கள் பிரச்சாரம். நீங்களே கற்றுக் கொண்டு, மேலும் இந்த வழிபாட்டை போதனை செய்யுங்கள். மக்கள் சந்தோஷம் அடைவார்கள். எளிமையான முறை."
690908 - உரையாடல் - ஹம்பர்க்