TA/690913 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டிட்டேன்ஹர்ஸ்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு என்றால், பகவானின் கருணையால் நாம் எதைப் பெற்றிருந்தாலும், நாம் கண்டிப்பாக திருப்தி அடைய வேண்டும். அவ்வளவுதான். ஆகையினால், நாங்கள் எங்கள் மாணவர்களை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம். ஏனென்றால் அது ஒரு பிரச்சனை. பாலியல் வாழ்க்கை ஒரு பிரச்சனை. எனவே இந்த திருமணம் ஒவ்வொரு சமூகத்திலும், இந்து சமூகம் அல்லது கிறிஸ்துவ சமூகம் அல்லது இஸ்லாமிய சமூகம், திருமணம் மத சடங்குகளுடன் நடைபெறுகிறது. அப்படி என்றால் ஒருவர் திருப்தி அடைய வேண்டும்: 'ஓ, பகவான் இந்த மனிதனை எனக்கு கணவராக அனுப்பியிருக்கிறார்'. மேலும் அந்த மனிதன் நினைக்க வேண்டும் அதாவது 'பகவான் இந்த பெண்ணை, இந்த அழகான பெண்ணை, எனக்கு மனிவியாக அனுப்பியிருக்கிறார். நாம் அமைதியாக வாழ்வோம்'. ஆனால் நான் விரும்பினால், 'ஓ, இந்த மனைவி நன்றாக இல்லை. அந்த பெண் அழகாக இருக்கிறாள்', 'இந்த மனிதன் நன்றாக இல்லை. அந்த மனிதன் நன்றாக இருக்கிறான்', பிறகு அனைத்து காரியமும் வீனாகிவிடும். அனைத்து காரியமும் வீனாகிவிடும்."
690913 - சொற்பொழிவு SB 05.05.01-2 - டிட்டேன்ஹர்ஸ்ட்