"எனவே இந்த இயக்கம் சும்மா உங்கள் உணர்வை, மூல முதலான உணர்வை புதுப்பிப்பதற்கானது. மூல முதலான உணர்வு கிருஷ்ண உணர்வாகும். மேலும் மற்ற உணர்வுகள், நீங்கள் இப்பொழுது பெற்றிருப்பது, அவை மேலோட்டமானது, தற்காலிகமானது. "நான் இந்தியன்," "நான் ஆங்கிலேயன்," "நான் இது," "நான் அது," — இவை அனைத்தும் மேலோட்டமான உணர்வு. உண்மையான உணர்வு அஹம்ʼ ப்ரஹ்மாஸ்மி. எனவே பகவான் சைதன்ய, இந்த இயக்கத்தை ஐநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா, வங்காளத்தில் துவக்கினார், அவர் உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கின்றார் அதாவது ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருʼஷ்ண தாஸ (சி.சி. மத்ய 20.108), நமது உண்மையான அடையாளம், உண்மையான இயல்பான நிலை, யாதெனில் நாம் கிருஷ்ணர் அல்லது பகவானின் அங்க உறுப்புகள். ஆகையினால் உங்கள் கடமை என்ன என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம்."
|