"பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது கடமைக்காக ஒருவர் செயல்களை செய்பவர், அதன் பலனை அனுபவிப்பதற்காக அல்ல, அது சாத்தியமாகும் போழுது... இபோது, நீங்கள் ஒரு குடும்பஸ்தனாக இருந்தால் உங்கள் குடும்பத்தை பராமரிக்க நீங்கள் வேலை செய்ய வேண்டும்; ஆகையினால் உங்கள் வேலையின் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும். எனவே இது பகவானுக்கு சேவை செய்வதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த ஒருவருக்குத் தான் சாத்தியமாகும். எனவே ருʼஷபதேவ பரிந்துரைக்கின்றார், அதாவது மனித பிறவியின் வாழ்க்கை குறிப்பாக துறவறத்திற்கானது, ஒழுக்க நெறிகள், சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப எதையும் செய்தல் கூடாது. சிறந்த ஒழுங்குமுறை வாழ்க்கை, அதுதான் மனித வாழ்க்கை."
|