TA/690916b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மகிழ்ச்சி என்றால் வரம்பற்றது, தடையற்ற மகிழ்ச்சி, எந்த நிபந்தனையும் இல்லாதது. அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அங்கு கட்டுபாடு இருந்தால், நிபந்தனை இருந்தால்... எவ்வாறு என்றால் இங்கு, நான் உணவகத்திற்குச் சென்றால் நிபந்தனை யாதெனில் நீங்கள் முதலில் பணம் செலுத்த வேண்டும், பிறகு நீங்கள் ஏதோ ஒன்று அனுபவிக்கலாம். எனவே அதேபோல், நான் ஒரு நல்ல அடுக்குமாடி இல்லத்தில், ஒரு நல்ல வீட்டில் அனுபவிக்க வேண்டுமென்றால், முதலில் நிறைய டாலர், பல பவுண்டு, செலுத்தி பிறகு அனுபவிக்க வேண்டும். அங்கு நிபந்தனை உள்ளது. ஆனால் ப்ரஹ்ம-ஸௌக்யத்தில், இது போன்ற நிபந்தனை இல்லை. வெறுமனே, உங்களால் அந்த தளத்தை அணுக முடிந்தால் பிறகு... அதுதான் அதன் அர்த்தம். ராம. இதி ராம-பதேனாஸௌ பரம்ʼ ப்ரஹ்ம இத்ய் அபிதீயதே (சி.சி. மத்ய 9.29). ராம. ராம என்றால் ராமன். ராம. முழு முதற் கடவுள், பகவான் ராமா. நீங்கள் அவருடன் இணைந்தால், ராமா அல்லது கிருஷ்ணா அல்லது விஷ்ணு, நாராயண... நாராயண பரா அவ்யக்தாத். அவர் உன்னதமானவர். எனவே எப்படியோ, நீங்கள் அவருடன் தோழமை கொணடால், நீங்கள் அந்த நிலைக்கு உயர்த்தப்பட்டால், பிறகு உங்களுக்கு ஆனந்தம், வரம்பற்ற மகிழ்ச்சி கிடைக்கும்."
690916 - சொற்பொழிவு - இலண்டன்