"எனவே இப்பொழுது மக்கள் இந்த குறிக்கோளைக் கூட கருதவிரும்பவில்லை, அதாவது "நான் நித்தியமானவன் என்றால், நான் என் இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால், என் உடை, என் தொழில் ஒவ்வொரு ஐம்பது வருடம் அல்லது பத்து வருடம் அல்லது பன்னிரண்டு வருடம் ஆடைக்கு ஏற்ப..." பூனையும் நாய்யும், அவை பத்து வருடங்களுக்கு வாழ்கின்றன. பசுக்கள் இருபது வருடங்களுக்கு வாழ்கின்றன மேலும் மனிதர்கள் சுமார், நூறு வருடங்களுக்கு வாழ்கின்றன. மரங்கள் ஆயிரம் வருடங்களுக்கு வாழ்கின்றன. ஆனால் எல்லோரும் மாற்றம் காண வேண்டும். வாஸாம்ʼஸி ஜீர்ணானி யதா விஹாய (ப.கீ 2.22). நாம் பழைய ஆடையை மாற்றிக் கொள்ள வேண்டியது போல, அதேபோல், இந்த உடல் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். மேலும் நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கணமும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். அது உண்மையே."
|