"உங்கள் வாழ்க்கையில் அறிவு, தெய்வீகம், பேரின்ப அறிவு நிறைந்திருக்கும்: வித்யா-வதூ-ஜீவனம். ஆனந்தாம்புதி-வர்தனம்ʼ: மேலும் அந்த தெய்வீகமான பேரின்பம் அதிகரிக்கும், ஆம்புதி. ஆம்புதி என்றால் சமுத்திரம். முழு நிலவில் சமுத்திரம் பெருகும், அதேபோல், உங்கள் அறிவு முழு நிலவைப் போல் ஆகும் பொழுது, உங்கள் ஆனந்தமும் பெருகும். எனவே இந்த காரியங்கள் பெறப்படுவது, பரம்ʼ விஜயதே ஷ்ரீ-க்ருʼஷ்ண-ஸங்கீர்தனம்: 'அனைத்து பெருமைகளும் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜெபித்தலுக்கே' எனவே தயவுசெய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மேலும் ஜெபிக்க முயற்சித்து சந்தோஷமாக இருங்கள்."
|