"மாயாவாதி தத்துவவாதி கூறுகிறான் அதாவது "நான் பகவான், ஆனால் நான், மாயாவால், நான் பகவான் அல்லவென்று நான் நினைக்கிறேன். எனவே தியானத்தின் மூலம் நான் பகவானாகிவிடுவேன்." ஆனால் அவ்வாறென்றால் அவன் மாயாவின் தண்டனையின் கீழ் இருக்கிறான். ஆக பகவான் மாயாவின் செல்வாக்கின் கீழ் இருக்கிறான். அது எப்படி? பகவான் பெரியவர், மேலும் அவர் மாயாவின் செல்வாக்கின் கீழ் இருந்தால், பிறகு மாயா பெரியவராகிவிடுவார். பகவான் எவ்வாறு பெரியவரானார்? எனவே உண்மையான யோசனை யாதெனில், இந்த பிரமையை நாம் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அதாவது "நான்தான் பகவான்," "அங்கே பகவான் இல்லை," "எல்லோரும் பகவான்தான்," இது போன்று பல விஷயங்கள், பகவானின் ஆதரவை பெறும் கேள்விக்கே இடமில்லை."
|