"நாம் மாயை பற்றி பேசுகிறோம், மாயா. இது மாயை, அதாவது "நான் இந்த உடல், மேலும் இந்த உடலுடன் தொடர்பாக இருக்கும் எதுவும்..." எனக்கு தனிப்பட்ட பெண்ணுடன் சிறப்பான உறவு உள்ளது, எனவே நான் நினைக்கிறேன், "அவள் என் மனைவி. அவள் இல்லாமல் நான் இல்லை." அல்லது மற்றொரு பெண், என் பிறப்புக்கு காரணமான பெண், "அவள் என் தாய்." அதேபோல் தந்தை, அதேபோல் மகன். இவ்விதமாக, நாடு, சமூகம், அதிகபட்சமாக, மனிதநேயம். அவ்வளவுதான். ஆனால் இவை அனைத்தும் மாயை, ஏனென்றால் அவை உடல் தொடர்பான உறவுமுறை. யஸ்யாத்மா-புத்தி꞉ குனபே த்ரி-தாதுகே ஸ ஏவ கோ-கர꞉ (ஸ்ரீ.பா. 10.84.13). இந்த மாயையான வாழ்க்கை முறையில் இருந்து கடந்து வருகிறவர்கள், அவர்கள் பசுக்களுடனும் கழுதைகளுடனும் ஒப்பிடப்படுகின்றனர். எனவே நமது முதல் வேலை யாதெனில், இந்த பொதுவான மக்கள் கூட்டத்தை மாயையான வாழ்க்கை நிலையிலிருந்து எழுந்திருக்க வைப்பதே. எனவே பரமபதம் அடைதல் விசேஷமாக அந்த நோக்கத்திற்கானது. நாங்கள் பரமபதம் அடைவதை பொதுவான மக்கள் கூட்டத்தின் மேல் முதல் நிலையாக தள்ளுகிறோம், அறிவொளியின் முதல் நிலையாக."
|