"கிருஷ்ண உணர்வை தீவிரமாக ஏற்றுக் கொணடவர்கள், அவர்களிடம் சிறு குற்றங்கள் இருந்தாலும், அவர்கள் புனிதமானவர்களே. அதுதான் கிருஷ்ணரின் பரிந்துரை. ஏனென்றால் அந்த குறைகள் அவர்களுடைய கடந்த காலப் பழக்கத்தினால் வந்தது, ஆனால் அது நிறுத்தப்பட்டுவிடுகிறது. எவ்வாறு என்றால் நீங்கள் மின்சாரத்தை அனைத்துவிட்டால், மின்சாரம் செயல்புரியாது, ஆனால் மின்விசிறி கடந்த சக்தியினால் சிறிது நேரம் சுற்றும். அதேபோல், ஒரு கிருஷ்ண உணர்வு நபர், அவர் தவறு செய்தார் என்றாலும், கிருஷ்ணர் கூறுகிறார், "இல்லை." ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய꞉ (ப.கீ. 9.30). "அவர் புனிதமானவர், சாது." ஏன்? இப்போது, அவர் மேற்கொண்டிருக்கும் செயல்முறை, நாளடைவில் அவரை குணப்படித்துவிடும். ஷஷ்வச்-சாந்திம்ʼ நிகச்சதி."
|