"எனவே கிருஷ்ண உணர்வுக்கு தோழமையால், பயிற்சியால் அதிர்ஷ்டவசமாக வந்திருப்பவர்களுககு, இதுதான் முறை. எனவே அதனுடன் இணைந்திருங்கள். விட்டுச் செல்லாதீர்கள். நீங்கள் சில குறைகளைக் கண்டாலும், சங்கத்தை விட்டுச் செல்லாதீர்கள். போராடுங்கள், மேலும் கிருஷ்ணர் உங்களுக்கு உதவி செய்வார். எனவே இந்த தீட்ஷை பெறும் செயல்முறை என்பது கிருஷ்ண உணர் வாழ்க்கையின் ஆரம்பமாகும். மேலும் நம்முடைய உண்மையான உணர்வில் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அதுதான் கிருஷ்ண உணர்வு. ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருʼஷ்ண தாஸ (சி.சி. மத்ய 20.108). பகவான் சைதன்ய மஹாபிரபுவால் பரிந்துரைக்கப்பட்டது போல், உண்மையான உணர்வு, அதாவது அவர் தன்னை கிருஷ்ணரின் நித்தியமான சேவகனாக அடையாளம் காட்டுகிறார். இதுதான் கிருஷ்ண உணர்வு, இதுதான் உயர்வை அடைதல், மேலும் இதுதான் முக்தி. நீங்கள் வெறுமனே இந்த கொள்கையில் இணைந்திருந்தால், கோபீ-பர்து꞉ பத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸானுதாஸ꞉ (சி.சி. மத்ய 13.80), அதாவது... "கிருஷ்ணரின் நித்தியாமான வேலைக்காரனைத் தவிர நான் வேறு ஒன்றும் இல்லை," பிறகு நீங்கள் முக்தியின் தளத்தில் இருப்பீர்கள். கிருஷ்ண உணர்வு மிகவும் அருமையானது."
|