"ஒரு நாய் அதன் எஜமானரால் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அது நினைக்கிறது. 'நான் முழுமையாக சார்ந்திருக்கிறேன் மேலும் நான் பிணைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு சுதந்திரம் இல்லை. நான் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை'. என்று அது நினைப்பதில்லை. அதன் சங்கிலி எடுக்கப்பட்டிருந்தாலும், அது பிணைக்கப்பட விரும்புகிறது. இதுதான் மாயா. வாழ்க்கையின் எந்த நிலையிலும், எல்லோரும் தான் சந்தோஷமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு எது மகிழ்ச்சி என்று தெரியவில்லை. இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது."
|