"உணர்வின் அளவே பகவானுக்கும் ஜீவராசிகளுக்கும் உள்ள வேற்றுமை. நம் உணர்வு வரையறுக்கப்பட்டது, மேலும் கிருஷ்ணரின் உணர்வு வரம்பற்றது, புரிந்துக் கொள்ள இயலாது. எனவே நம் கடந்த வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி நாம் மறந்துவிட்டோம், ஆனால் கிருஷ்ணர் மறப்பதில்லை. கிருஷ்ணர் நம்முடைய ஒவ்வொறு செயல்களின் அசைவையும் கணக்கில் வைத்துள்ளார். அவர் உங்கள் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்: ஈஷ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி (ப.கீ. 18.61). அவர் கணக்கு வைத்திருக்கிறார். நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்கள். "சரி," கிருஷ்ணர் கூறுகிறார், "அதைச் செய்." நீ புலியாக வேண்டுமா? "சரி," கிருஷ்ணர் கூறுகிறார், "நீ புலியாகி, மேலும் மிருகங்களை வேட்டையாடி, மேலும் புதிய இரத்தத்தை உறிஞ்சிவிட்டு, உன் புலன்களை திருப்திப்படுத்து." எனவே கிருஷ்ணர் உனக்கு வாய்ப்பு அளிக்கிறார். அதேபோல், நீ கிருஷ்ண பக்தனாக, கிருஷ்ண உணர்வை பெற்று, மேலும் அவருடன் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர் உனக்கு வசதிகளை கொடுப்பார். அனைத்து வசதிகளையும் கொடுப்பார். நீ ஏதாகிலும் ஆக வேண்டுமென்றால், அவர் உனக்கு முழு வசதிகளும் கொடுப்பார். நீ அவரை மறக்க வேண்டுமென்றால், அவர் உனக்கு அதிகமான அறிவை கொடுத்து அதனால் நீ அவரை என்றென்றும் மறக்கவைத்துவிடுவார். மேலும் நீ அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்றால், அவர் உனக்கு வாய்ப்பு அளிப்பார், தனிப்பட்ட முறையில் நட்பு, எவ்வாறு என்றால், கோபியர்கள், இடையச் சிறுவர்கள் போல், கிருஷ்ணருடன் விளையாடிக் கொண்டிருக்க."
|