"நம் தினசரி வாழ்க்கையை போல், எல்லா இடங்களிலும் எங்களுக்கு சில தலைமையானவர்கள், ஒரு தலைவர் இருக்கிறார், நீங்கள் என்னை உங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டது போல். அதேபோல், தலைவனுக்கு தலைவன், தலைவனுக்கு தலைவன், செல்லுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள் தேடிக் கொண்டே இருங்கள்; நீங்கள் கிருஷ்ணரிடம் வந்ததும், அவர்தான் எல்லோருக்கும் தலைவர். அதுதான் கிருஷ்ணா. அவ்வளவுதான். ஈஷ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (ப.ஸ். 5.1). எல்லோரும் ப்ரஹ்ம, பகவான், நீங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும், ஈஷ்வர꞉—ஆனால் பரம꞉. யாரும் இல்லை. பரம꞉ என்றால் 'பூரணமானவர்'. நான் இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துபவராக இருக்கலாம்; ஜனாதிபதி இந்த நாட்டைக் கட்டுப்படுத்துபவராக இருக்கலாம்; ஆனால் எவரும் 'நான் பூரணமான கட்டுப்பாடு செய்பவர்' என்று கூற முடியாது. அது சாத்தியமல்ல. அது கிருஷ்ணருக்கு மட்டுமே. அந்த பதவி கிருஷ்ணருக்கு மட்டுமே."
|