TA/700430 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் கட்டுண்டவர்கள் ஏனென்றால் கருப்பொருளைவிட உயர்ந்த நம் நிலையை, நாம் தவறாக பயன்படுத்துகிறோம். நாம் எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறோம்? நாம் மறந்துவிட்டது, அதாவது நான் கருப்பொருளைவிட உயர்ந்த சக்தி பெற்றிருந்தாலும், பகவானைவிட நான் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவன். அதை அவன் மறந்துவிடுகிறான். இந்த நவீன நாகரீகம், அவர்கள் பகவானைப் பற்றி அக்கறை கொள்வதில்லை, ஏனென்றால் மக்கள் கருப்பொருளைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே கருப்பொருளை பல வழியில் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாம் அமெரிக்கராக அல்லது ரஷ்யராக அல்லது சீனராக அல்லது இந்தியராக இருந்தாலும், நாம் எல்லோரும் பகவானைவிட குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதுதான் அந்த தவறு. க்ருʼஷ்ண புலிய ஜீவ போக வாஞ்சா கரே (ப்ரேம-விவர்த). அவர்கள் கிருஷ்ணரை மறந்துவிட்டார்கள், மேலும் இந்த பௌதிக உலகை அனுபவிக்க விரும்புகிறார்கள். இதுதான் அவர்களுடைய நோய். இபோது நம் கடமை அவர்களுடைய கிருஷ்ண உணர்வை தூண்டி உயிர்பிக்க வேண்டும், அதாவது "நீங்கள் உயர்ந்தவர், அது சரி. ஆனால் கிருஷ்ணரைவிட குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்."
700430 - சொற்பொழிவு ISO 01 - லாஸ் ஏஞ்சல்ஸ்