"எங்கள் அக்கறை என்னவென்றால், நாங்கள் போதிக்க வேண்டும். அதுதான் பக்தி வாழ்க்கையின் இரண்டாவது தளம். அந்த இரண்டாவது தளத்தில், பகவானை நேசிப்பது மட்டுமல்ல, ஆனால் பகவானை நேசிக்கும் பக்தர்களுடன் தோழமை கொள்ள வேண்டும். அதுதான் நம் சமூகம். பக்தர்கள் தான் நம் சமூகம். நாம் பகவானை மட்டும் நேசிக்க பயிற்சி செய்யக் கூடாது, ஆனால் நாம் பக்தர்களுடன் தோழமை கொண்டு அவர்களை நேசிக்கவும் வேண்டும். பிறகு அப்பாவியாக இருப்பவர்கள், கிருஷ்ணர் யார் என்று புரிந்துக் கொள்ள இயலாதவர்களுக்கு, நாம் போதிக்க வேண்டும். மேலும் நாத்திகர், பகவானுக்கு எதிரியாக இருப்பவர்களை நாம் தவிர்க்க வேண்டும்."
|