TA/700503 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
:ஸ வை பும்ʼஸாம்ʼ பரோ தர்ம
யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹைதுக்ய் அப்ரதிஹதா
யயாத்மா ஸுப்ரஸீததி
(ஸ்ரீ.பா.1.2.6)

"இது பாகவத மதம். இது முதல் தரமான மதம். அது என்ன? யதா:, மதக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம், நீங்கள் பரமபுருஷரை நேசிக்க ஆரம்பித்தால், உங்கள் வார்த்தையின் வெளிப்பாட்டிற்கும் மேலும் உங்கள் மனத்தின் செயல்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்... அதோக்ஷஜே. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, அதோக்ஷஜே: உங்கள் பௌதிக புலன்கள் அணுக முடியாத இடம். மேலும் எம்மாதிரியான நேசம்? அஹைதுக்ய், எந்த நோக்கமும் இல்லாமல். 'ஓ பகவானே, நான் உங்களை நேசிக்கிறேன், பகவானே, ஏனென்றால் நீங்கள் எனக்கு பல நல்ல பொருள்களை அளிக்கிறீர்கள். நீங்கள் ஆர்டர் சப்ளையர்'. இல்லை. அந்த மாதிரியான பாசம் இல்லை. எவ்விதமான பரிமாற்றமும் இல்லாமல். அதுதான் சைதன்ய மஹாபிரபுவால் கற்பிக்கப்பட்டது, அதாவது 'நீங்கள் என்ன செய்தாலும்...' ஆஷ்லிஷ்ய வா பத-ரதாம்ʼ பிநஷ்டு மாம் (சி.சி. அந்த்ய 20.47). "நீங்கள் உங்கள் காலடியில் போட்டு என்னை மிதித்தாலும் அல்லது என்னை தழுவிக் கொண்டாலும்... நீங்கள் விரும்பியபடி. உங்களை காண முடியாதபடி என்னை மனமுடைந்து போக செய்தாலும்—அது முக்கியமல்ல. இருப்பினும் நீங்கள் தான் நான் வழிப்படும் தெய்வம்." இதுதான் அன்பு."

700503 - சொற்பொழிவு ISO 01 - லாஸ் ஏஞ்சல்ஸ்