"நீங்கள் செல்வந்தர் குடும்பத்தில், பிரபுக்களின் குடும்பத்தில், அல்லது விலங்கின் கருவில் பிறந்தாலும், பிறப்பின் வேதனை, இறப்பு, நோய், மேலும் முதுமை தொடர்ந்து வரும். எனவே கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் இந்த நான்கு காரியங்களுக்கும் தீர்வு காண்பதற்கு தான்: பிறப்பு, இறப்பு, முதுமை மேலும் நோய். எனவே நாம் நிறைந்த பாவத்துடன் செயல்பட்டால், மேலும் பாவம் நிறைந்ததை உட்கொண்டால், பிறகு இந்த பிறப்பு, இறப்பு, முதுமை நிறைந்த வாழ்க்கை தொடரும். இல்லையேல், நீங்கள் தீர்வு காணலாம், பகவத் கீதையில் கூறியிருப்பது போல் த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (ப.கீதை 4.9): "இந்த உடலை பிரிந்து சென்ற பிறகு," த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி, "அவன் மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறப்பதில்லை."
|